
நான் உள்ளிழுக்கும் சுவாசமாய் என்னோடு நீ
வானவில் பொழுதுகளில் வண்ணங்களோடு
வாசமும் சேர்த்து தருகிறாய் நீ
இமைகள் மூடிய எனது விழிகளில்
உனது முத்தங்கள்
உள்ளிலும் வெளியிலுமாய்
நீண்டிருக்கும் பாலைவனம் கூட
உனது அருகாமையில்
பச்சைப் புல்வெளியாய் மாறிப்போகும்
தாமரை மீதுள்ள நீர்த்துளியாய்
உன்னோடே வட்டமிடுகிறது மனம்
களைப்பேறிய பொழுதுகளில்
தாகம் தீர்க்கும் அருவி நீ எனக்கு.
விழிகள் முழுவதும் நிரம்பியே இருக்கிறது
உனக்கான காதல்
நீ பார்க்கும் பொழுதெல்லாம் பரிமாறிக்கொள்ள.



























